மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பெண்களுக்கான 35% இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது அம்மாநில அரசு.
இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், தேசிய கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அரசு பணிகளில் பெண்களுக்கு 35% இடஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
காவல்துறை மற்றும் பிற அரசுப் பணிகளில் 35 சதவீத காலிப் பணியிடங்கள் பெண்களைக் கொண்டு நிரப்பப்படும் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். மேலும், ஆசிரியர் பணியிடங்களில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அரசு அளிக்கும் என்று கூறியுள்ளார்.
அதாவது, வனத் துறையைத் தவிர்த்து, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 35% இடஒதுக்கீடு வழங்க, 1997ல் மத்தியப் பிரதேச அரசு பணியாளர் சட்டத்தில் இருக்கும் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு பெண்களுக்கு 35% இடஒதுக்கீடு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…