அடுத்த 3 நாட்களுக்குள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 35 லட்சம் தடுப்பூசி வழங்கப்படும் – மத்திய அரசு!
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அடுத்த மூன்று தினங்களில் 39 லட்சம் தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், மக்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி தெரிவிக்கப்பட்ட புதிய தடுப்பு சட்டத்தின்படி மத்திய அரசே மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தடுப்பூசியை கொள்முதல் செய்து வழங்கி வருகிறது.
இதுவரை 29, 68,27,450 கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. அதில், 27,76,26,985 டோஸ்கள் தற்போது வரை பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், அடுத்த மூன்று நாட்கள் கூடுதலாக 39 லட்சத்து 7 ஆயிரத்து 310 தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.