Big Breaking : குஜராத் கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் 35 பேர் பலி
குஜராத்தின் மோர்பியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் ஞாயிற்றுக்கிழமை மாலை குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாகவும் பலர் இன்னும் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள மோர்பியில் மச்சு ஆற்றில் நடந்துள்ளது.கிட்டத்தட்ட 400 பேர் பாலத்தில் இருந்ததாக சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத ஊகங்கள் கூறுகின்றன.
மாலை 6.30 மணியளவில் பாலம் இடிந்து விழுந்தபோது அதில் 150 பேர் இருந்ததாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது .
இறந்தவர்களின் உறவினர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இழப்பீடு அறிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, விபத்து குறித்து குஜராத் முதல்வர் மற்றும் பிற அதிகாரிகளிடம் பேசியுள்ளார்.