காங்கிரஸ் கட்சி இந்திய அளவில் மிகப்பெரிய கட்சி. இந்த கட்சிக்கு இந்திய முழுவதும் அலுவலகங்கள் உள்ளன.அதே போல உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள சவுக் லொக்காலிட்டி என்ற இடத்தில் காங்கிரஸ் அலுவலகம் உள்ளது.இது, கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் அலுவலகமாக செயல்படுகிறது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே காங்கிரஸ் அலுவலகமாக மாறி இருந்தது. இது, 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது.
இந்த அலுவலகம் தனியாருக்கு சொந்தமானதாகும். அதை காங்கிரஸ் அலுவலகமாக வாடகைக்கு அமர்த்தி இருந்தனர்.தற்போது இந்த இடம் ராஜ்குமார் சரஸ்வத் என்பவருக்கு சொந்தமாக உள்ளது. அவர், கட்டிடத்துக்கு 35 ரூபாய் மாத வாடகையாக நிர்ணயித்து இருந்தார். அந்த வாடகையை கூட காங்கிரஸ் கட்சி முறையாக செலுத்தவில்லை.10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு பைசா கூட வாடகை கொடுத்தது இல்லை. இவ்வாறு ரூ. 50 ஆயிரம் வரை வாடகை பாக்கி உள்ளது.இந்த இடம் அமைந்துள்ள பகுதி மிகவும் முக்கியமான பகுதி.அதன் தற்போதைய மதிப்பு பல கோடி ஆகும்.
கட்டிட உரிமையாளர் பல முறை கேட்டு பார்த்தும் யாரும் அந்த பணத்தை கொடுப்பதாக இல்லை. இதனால் அவர் காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீசு அனுப்பி உள்ளார்.இந்த விவரங்களை காங்கிரஸ் கட்சியினர் கட்சி தலைவர் ராகுல்காந்திக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…