5 ஆண்டுகளில் சாக்கடைகள், கழிவுநீர்த் தொட்டிகள் சுத்தம் செய்யும் போது 347 பேர் உயிரிழப்பு !
இந்தியாவில் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது கடந்த ஐந்து ஆண்டுகளில் 347 பேர் உயிரிழப்பு
கடந்த 5 ஆண்டுகளில் சாக்கடைகள், கழிவுநீர்த் தொட்டிகள், மனித மலக் கழிவுகளை சுத்தம் செய்யும் போது, 347 பேர் உயிரிழந்தவரிழந்ததாக மக்களவையில் ஒன்றிய சமூக நீதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை தெரிவித்துள்ளது.
மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் வீரேந்திர குமார், 2017 இல் 92, 2018 இல் 67, 2019 இல் 116, 2020 இல் 19, 2021 இல் 36 மற்றும் 2022 இல் 17 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று குறிப்பிட்டார்.
இதில் உத்தர பிரதேசம் , தமிழ்நாடு, டெல்லி ஆகிய மூன்று மாநிலங்களிலும் 40% உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.
மனித மலத்தை கைமுறையாக சுத்தம் செய்வதற்கும், எடுத்துச் செல்வதற்கும், அப்புறப்படுத்துவதற்கும் அல்லது வேறுவிதமாக கையாளுவதற்கும் எந்தவொரு நபரையும் பயன்படுத்துவதை சட்டம், 2013 இன் கீழ் தடை செய்கிறது.