உ.பி மாநிலம் பால்லியாவில் வெயில் தாக்கம் காரணமாக 48 மணிநேரத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோடை காலம் முடியும் தருவாயிலும் இன்னும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து தான் காணப்படுகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அரசு, மக்களை பாதுகாப்பாக இருக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருந்தும் சில சமயங்களில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டு விடுகின்றன.
உத்திர பிரதேசத்தில், பல்லியா மாவட்டத்தில் கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் 34 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்ததாக, தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெயந்த் குமார் நேற்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ‘ உபியில் வெப்பம் அதிகரித்துள்ளது. செய்திகள் வாயிலாக பல்லியா மாவட்ட மருத்துவமனையில், வியாழக்கிழமை 23 பேரும், வெள்ளிக்கிழமை 11 பேரும் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்ததாக பார்த்தேன். இதுகுறித்து அனைத்து மருத்துவர்களிடமும் பேசினேன். இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என்பது குறிப்பித்தக்கது என்றார்.
அடுத்ததாக, உயிரிழந்தவர்களுக்கு அவர்கள் உயிரிழப்புக்கு முன்னர் வரை தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த உயிரிழப்புகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் பல்லியா மாவட்ட அதிகாரி தெரிவித்தார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…