கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 906 பேர் பாதிக்கப்பட்டு, 34 பேர் உயிரிழப்பு என சுகாதாரத்துறை இணை செயலர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 34 பேர் உயிரிழந்துள்ளார்கள். அதேபோல் 906 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவிகிதம் பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார். மேலும் 1,671 கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன், தீவிர சிகிச்சை தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுவரை 1,89,906 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். நேற்று ஒரே நாளில் மட்டும் 17,143 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 8,356 பேர் பாதிக்கப்பட்டு, 273 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சை பெற்று வந்த 716 பேர் குணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…
மும்பை : கங்குவா திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் ரீதியாகச் சாதனை படைக்கும் எனப் படக்குழு மிகவும்…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…