திரிபுராவில் 34, நாகாலாந்தில் 38… மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரும் பாஜக அணி!
நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா தேர்தல் முடிவுகள் முன்னிலை நிலவரம்.
திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இதில், மேகாலயாவில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், மற்ற இரண்டு வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக அணி.
திரிபுராவில் மொத்தமுள்ள 60 இடங்களில் 34 இடங்களில் பாஜக அணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. திமோக 12 இடங்களிலும், இடதுசாரி – காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
நாகாலாந்தில் பாஜக, என்டிபிபி கூட்டணி 38 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்கிறது. நாகாலாந்து மக்கள் முன்னணி 1, பிற கட்சிகள் 21 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அப்படியே மேகாலயாவில் தேர்தல் முடிவு வேறு மாதிரி உள்ளது. அங்கு என்பிபி 25 இடங்களிலும், பாஜக 3, காங்கிரஸ் 5 மற்றும் பிற கட்சிகள் 26 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.