4 மணி நேரத்தில் 33,300 பேர் பயணம்..!
நேற்று டெல்லியில் காலை 7 மணி முதல் 11 மணி வரை 33,300 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கு பிறப்பித்தார். ஊரடங்கு காரணமாக டெல்லி மெட்ரோ சேவைகள் மூடப்பட்டன. சமீபத்தில் மத்திய அரசு 4 -ம் கட்ட ஊரடங்கு தளர்வை அறிவித்தது. அதில், நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அனுமதி வழங்கியது.
பல மாதங்களுக்குப் பின் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கப்பட்ட டெல்லி மெட்ரோ ரயில் சேவையில் நேற்று காலை 7 மணி முதல் 11 மணி வரையிலான 4 மணி நேரத்தில் மட்டும் 33,300 பேர் பயணம் செய்துள்ளனர் என டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில்கள் இப்போது காலை மற்றும் மாலை நேரங்களில் தலா நான்கு மணி நேரம் இயக்கப்படுகின்றன.