33 வகையான உணவுகளை 60 நிமிடத்தில் சமைத்த 10 வயது சிறுமி.
சமையல் என்பது சிலர் கடமைக்கு செய்வார்கள், சிலர் ரசித்து செய்வர். அந்த வகையில், எர்ணாகுளத்தை சேர்ந்த விமானப்படை விங் கமாண்டர் பிரஜித் பாபுவின் மகள், சன்வி பிரஜித் என்ற 10 வயது சிறுமி, இட்லி, ஊத்தப்பம், ப்ரைடு ரைஸ், காளான் டிக்கா, பன்னீர் டிக்கா, சிக்கன் நூடில்ஸ், உள்ளிட்ட 33 வகையான உணவுகளை 60 நிமிடத்தில் சமைத்துள்ளார்.
சமையல் மீது கொண்ட காதல், சிறுமி சன்வியை சாதனை சிறுமியாக மாற்றியுள்ளது. 60 நிமிடத்தில் 33 வகையான உணவுகளை செய்து சாதனை படைத்துள்ள இந்த சிறுமி, ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 10 வயதே ஆன இந்த சிறுமி யூடியூபில் சமையல் கலையையும் கற்றுக் கொடுக்கிறார். இவரது தாயார் ஒரு சமையல் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய சாதனை குறித்து சிறுமி கூறுகையில், தனது தாயாரின் சமையலில் ஈர்க்கப்பட்டு தான் இந்த சாதனை செய்ததாகவும், இந்த சாதனையை தனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அர்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.
டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …
துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…
சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…