2 தடைகள்… 2034இல் தான் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வரும்.! ப.சிதம்பரம் திட்டவட்டம்.! 

Congress Leader P Chidambaram

அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொண்டு வந்தார். இந்த சட்ட மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஆளும்கட்சி , எதிர்க்கட்சி என பாகுபாடு இல்லாமல் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட மசோதாவில், 33% இட ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கு பட்டியலின பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், 15 ஆண்டுகளுக்கு இந்த மசோதா அமலில் இருக்கும் என்றும், அதன் பிறகு வேண்டும் என்றால் நீட்டித்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டது. இந்த சட்டமானது மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை செய்த பின்னர் அமல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த சட்ட அமளிப்படுத்துதல் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இன்று காரைக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், பெண்களுக்கு 33 சதவீத சட்ட மசோதாவை இப்போதைக்கு நிறைவேற்ற முடியாது. அதனை நிறைவேற்ற 2 தடை கற்கள் உள்ளது என குறிப்பிட்டார்.

அதாவது,  அண்மையில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, தற்போது குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றுவிட்டதால் அது நிறைவேற்றப்பட்டு விடும் என கூறமுடியாது. தற்போதைக்கு மசோதா சட்டமாகியுள்ளது அவ்வளவுதான். அதனை அமல்படுத்துவதில் ஆளும் பாஜக அரசு 2 மிக பெரிய தடைகளை வைத்துள்ளது என ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இந்த சட்டத்தை 1996இல் பிரதமராக பொறுப்பில் இருந்த தேவகவுடா அறிமுகம் செய்தார். அவரால் நிறைவேற்ற முடியவில்லை. அடுத்து 2 முறை வாஜ்பாய் பிரதமராக இருந்த போது நிறைவேற்ற முயன்றார். அதன் பிறகு இந்த சட்ட மசோதாவை 9.3.2010 அன்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவையில் மட்டும் இந்த மசோதா நிறைவேறியது.

அதே மசோதா இப்போது கொண்டு வரப்பட்டு இருந்தால் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கே நடைமுறைக்கு வந்து இருக்கும். ஆனால், இப்போ நிறைவேற்றப்பட்ட மசோதாவை 2024இல் அல்ல 2029இ;ல் கூட நிறைவேற்ற முடியாத படி, 2 தடைகள் மத்திய அரசு வைத்துள்ளது.

அதில் ஒரு தடை என்னவென்றால், மக்கள் தொகை கணக்கெடுப்பு. 2வது தடை தொகுதி மறுவரையறை. இது தடை அல்ல தடை சுவர். இதனால் 2024 மற்றும் 2029லும் சட்ட மசோதா நிறைவேறாது. சட்டதிருத்தபடி 2026க்கு பிறகு நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கீட்டின் படிதான் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற முடியும். மக்கள் தொகை கணக்கெடுப்பை எப்போது நடத்தினாலும் அதனை நடத்தி முடித்து முடிவுகளை வெளியிட 2 ஆண்டுகள் ஆகும். அப்படி பார்த்தால் 2026இல் மக்கள் தொகை கணக்கீடு எடுக்கப்பட்டு 2028இல் அது வெளியிடப்படும். 2029இல் அடுத்த தேர்தல் வரும்.

அடுத்த தடை தொகுதி மறுவரையறை. கடந்த முறை தொகுதி மறுவரையறை 2002இல் 2008ஆம் ஆண்டு தான் முடிக்கப்பட்டது. தொகுதி மறுவரையறைக்கு 6 ஆண்டுகள் ஆனது. 2028க்கு பிறகு 4 ஆண்டுகள் என எடுத்துக்கொண்டாலும், மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற 2034 (2024 நாடாளுமன்ற தேர்தல்) வரை ஆகலாம் என மகளிர் இடஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்கள் மத்தியில் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்