கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 33 பேர் பலி..678 பேர் பாதிப்பு.!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 33 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்றும் 678 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க தவிர வேற எதற்காகவும் வெளியில் வர கூடாது எனவும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,412 பேர் ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 199 ஆகவும் உள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 504 பேர் குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 33 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்றும் 678 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் இந்தியாவில் சமூக பரவல் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.