33 விழுக்காடு தென்மாநிலங்களில் வாழும் வட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
தென் மாநிலங்களில் வாழும் வட இந்தியர்களின் எண்ணிக்கை மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 2001-2011ஆண்டுகளுக்குட்பட்ட பத்தாண்டுக்காலத்தில் 33விழுக்காடு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாள மொழி பேசுவோரின் எண்ணிக்கை 2001க்கும் 2011க்கும் இடைப்பட்ட பத்தாண்டுக்காலத்தில் குறைந்துள்ளது. இதேபோல் மற்ற மாநிலங்களிலும் தென் மாநில மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேநேரத்தில் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இந்தி, வங்காளி, ஒடியா மொழி பேசும் வட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தென்மாநிலங்களைத் தவிர்த்துப் பிற மாநிலங்களில் 2001இல் 8லட்சத்து இருபதாயிரம் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். இது 2011இல் 5விழுக்காடு குறைந்து 7 லட்சத்து எண்பதாயிரமாக உள்ளது. 2001இல் தென்மாநிலங்களைத் தவிர்த்துப் பிற மாநிலங்களில் 8லட்சம் மலையாளிகள் வாழ்ந்து வந்தனர்.
இது 2011இல் 10விழுக்காடு குறைந்து 7 லட்சத்து இருபதாயிரமாக உள்ளது. இதேபோல் 2001இல் தென்மாநிலங்களில் வடமாநிலத்தவர் 58லட்சத்து இருபதாயிரம் பேர் வாழ்ந்து வந்தனர். இது 2011இல் 33 விழுக்காடு அதிகரித்து 77லட்சத்து ஐம்பதாயிரமாக உள்ளது.