ராஜீவ் காந்தியின் 32வது நினைவு நாள்..! ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் அஞ்சலி..!
ராஜீவ் காந்தியின் 32வது நினைவு நாளை முன்னிட்டு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள வீரபூமியில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
पूर्व प्रधानमंत्री स्व. राजीव गांधी जी की स्मृति में समाधि स्थल वीर भूमि पर प्रार्थना सभा का आयोजन किया गया।
कांग्रेस अध्यक्ष श्री @kharge, CPP चेयरपर्सन श्रीमती सोनिया गांधी जी, पूर्व अध्यक्ष श्री @RahulGandhi और महासचिव श्रीमती @priyankagandhi जी ने पूर्व… pic.twitter.com/dGw86S7Yis
— Congress (@INCIndia) May 21, 2023
இவர்கள் அஞ்சலி செலுத்தும் விடீயோவை காங்கிரஸ் கட்சி அந்த ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. மேலும், ராஜீவ் காந்தியின் பல்வேறு நினைவுகள் அடங்கிய வீடியோவை காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அதில், அப்பா, நீங்கள் என்னுடன், ஒரு உத்வேகமாக, நினைவுகளில், எப்போதும் என்று பதிவிட்டுள்ளார்.
पापा, आप मेरे साथ ही हैं, एक प्रेरणा के रूप में, यादों में, सदा! pic.twitter.com/WioVkdPZcr
— Rahul Gandhi (@RahulGandhi) May 21, 2023