மும்பை : இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக சென்செக்ஸ் 32,000 புள்ளிகளை எட்டிப்பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டியும் 9,900 புள்ளிகளை எட்டி உள்ளது.1999ம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக ஜூன் மாதத்தில் பணவீக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக தொடர்ந்து 4வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின.இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஜூலை 13, காலை 9 மணி நிலவரம்) 189.99 புள்ளிகள் உயர்ந்து 31,994.81 புள்ளிகளாகவும், நிப்டி 56.50 புள்ளிகள் உயர்ந்து 9872 புள்ளிகளாகவும் இருந்தது.டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, இன்போசிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பங்கு மதிப்பு வெகுவாக உயர்ந்ததன் காரணமாக காலை 9.30 மணியளவில் பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டின.சென்செக்ஸ் 215.60 புள்ளிகள் உயர்ந்து 32,020.42 புள்ளிகள், நிப்டி 62.40 புள்ளிகள் உயர்ந்து 9878.50 புள்ளிகள் என்ற அளவையும் எட்டி உள்ளன. மின்துறை, உலோகம், வங்கி துறை, ஆட்டோ துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் பங்குகள் தொடர்ந்து ஏற்றத்துடனேயே காணப்படுவதால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…