ராஜஸ்தான் : திருமண நிகழ்வில் சிலிண்டர் வெடித்து கோர விபத்து.! உயிரிழப்பு 32ஆக உயர்வு.!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் திருமண நிகழ்வில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் ஷேர்கர் அருகே உள்ள புங்ராவில் திருமண நிகழ்வு நடைபெற்ற போது சிலிண்டர்வெடித்து பெரிய விபத்து ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர்.
இதுவரை சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் ராஜேந்திர சிங் ரத்தோர், ‘ இந்த கொடூரமான சம்பவத்திற்கு மத்தியில் நேற்று காங்கிரஸார் ஒற்றுமை யாத்திரையை கொண்டாடி வருகின்றனர் என குற்றம் சாட்டினார். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு எரிவாயு நிறுவனத்தில் இருந்து தலா கோடி ரூபாய் வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.