32 வருடங்களுக்கு பின்பு இந்தியாவிற்கு வரும் அமெரிக்க எண்ணெய் கப்பல்…!

Default Image

புதுடில்லி: அமெரிக்காவிலிருந்து, முதல் கச்சா எண்ணெய் கப்பல், இன்று இந்தியா வந்தடைகிறது. நாட்டின் தேவையில் குறிப்பிட்ட பங்கை, அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி நிறைவு செய்வதால், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.1975ல் தடைஅமெரிக்காவில் இருந்து இந்தியா, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, 1975ல் தடை விதிக்கப்பட்டது. இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், மத்திய கிழக்கு நாடுகளான, ஈரான், குவைத், சவுதி அரேபியா ஆகியவற்றிட மிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஜூனில், அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அதிபர் டெனால்டு டிரம்பை சந்தித்து, எரிசக்தி ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டார். 39 லட்சம் பீப்பாய் அப்போது, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. அமெரிக்காவிலிருந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து, முதல், கச்சா எண்ணெய் கப்பல், இன்று, இந்தியா வந்தடைகிறது.இது குறித்து, இந்தியன் ஆயில் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:அமெரிக்காவில் இருந்து, 39 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, இந்தியன் ஆயில் கழகம் ஒப்பந்தம் செய்தது. முதற்கட்டமாக, அந்நாட்டின் டெக்சாஸ் நகரில்இருந்து, 16 லட்சம், கச்சா எண்ணெய் பீப்பாய்களுடன், முதல் எண்ணெய் கப்பல், ஆக., 19ல் புறப்பட்டது.

இந்த கப்பல், ஒடிசா, பாரதீப் துறைமுகத்தை இன்று வந்தடைகிறது. இந்த கச்சா எண்ணெயை பெற்றுக் கொண்டு, சுத்திகரிக்கும் பணியை ஐ.ஓ.சி., மேற்கொள்ளும். அமெரிக்கா ஒப்புதல் மற்ற பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், 29.5 லட்சம் பீப்பாய், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், 10 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன. இந்தியாவுக்கு, மொத்தம், 78.50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய, அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து, இரண்டாவது எண்ணெய் கப்பல், அடுத்த மாதம் இந்தியா வரவுள்ளது. கப்பல் மூலம் இறக்குமதி இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து அமெரிக்க துாதரகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘அமெரிக்க கச்சா எண்ணெய் நிறுவனங்களும், இந்தியாவும் சேர்ந்து, 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், இரு தரப்பு வர்த்தகம் மேற்கொள்ள உள்ளன. ‘அமெரிக்காவில் இருந்து, ஆண்டுக்கு, 58 லட்சம் டன், கச்சா எண்ணெய், கப்பல் மூலம் இறக்குமதி செய்ய, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை குறையும் இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:மற்ற நாடுகளுடன் ஒப்பிடு கையில், அமெரிக்காவில் இருந்து கப்பல் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு, லாபம் தரக் கூடியது.மற்ற நாடுகளில் இருந்து, 2015 – 16ல், 20 கோடி டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆண்டுக்கு, 58 லட்சம் டன் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளது.இனி, தட்டுப்பாடின்றி, நியாயமான விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலை சிறிது குறைக்கப்படும் வாய்ப்பை எதிர்பார்க்கலாம்.இவ்வாறு அதிகாரி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
atlee and loki
Tamilnadu CM MK Stalin - VCK Leader Thirumavalavan
ind vs aus border gavaskar trophy
sleeping position (1)
Erumbeeswarar (1)
Tungsten mining