31,313 பேருக்கு உடனடியாக இந்திய குடியுரிமை கிடைக்கும்.! நாடாளுமன்றம் அறிவிப்பு.!
- நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டதிருத்த மசோதா விரைவில் அமலுக்கு வரும்.
- 31,313 பேருக்கு உடனடியாக இந்திய குடியுரிமை கிடைக்கும் என தகவல்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டதிருத்த மசோதா விரைவில் சட்டவடிவம் பெற்றவுடன் 31,313 பேருக்கு உடனடியாக இந்திய குடியுரிமை கிடைக்கும் என தகவல் வந்துள்ளது. இதில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து நீண்ட கால விசா பெற்று இந்தியாவில் வசிக்கும் சுமார் 25,447 பேர்கள் இந்துக்கள் என தகவல் வந்துள்ளது.
மேலும் சீக்கியர்கள் 5,807 பேர்களும், கிறித்தவர்கள் 55 பேர்களும், புத்தர்கள் மற்றும் பார்சிகள் தலா 2 பேர் இருக்கின்றனர். இவர்களைத் தவிர வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்து அசாமில் வசிக்கும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்துக்களுக்கும் நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட உள்ளன.
2021-ம் ஆண்டு அசாம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே இவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுவிடும் என்று அந்த மாநில நிதி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் குடியுரிமை வழங்கப்பட்ட பின் சுமார் 55,000 பேர் அரசுப் பணியாளர்கள் ஈடுபடுவார்கள் என தெரிகிறது. இதற்காக ரூ.1,600 கோடி ஒதுக்கப்பட உள்ளது என தகவல் கிடைத்துள்ளது.