ஒரே நாளில் 31,000 முகக்கவசங்கள் தயாரிக்கும் புழல் கைதிகள்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், இதற்கான முகக் கவசங்கள் அதிக அளவில் தயாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளோம். இந்நிலையில், புழல் சிறையில் உள்ள கைதிகள் ஒருநாளைக்கு 31 ஆயிரம் முகக் கவசங்கள் தயாரிக்கின்றனராம். இதை உருவாக்கக்கூடிய தையல் தொழிலில் 8 மணி நேரம், 150 கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை ஒரு லட்சத்து 80 ஆயிரம் முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டு டிஜிபி அலுவலகம் மற்றும் காவல்துறையில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தரமான முறையில் இந்த முகக் கவசங்கள் தயாரிக்கப்படுவதாகும், இதன் அடக்க விலை 10 ரூபாய் மட்டுமே என்றும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதிகளால் தயாரிக்கக் கூடிய இந்த முக கவசத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.