பி.எம் கேர் நிவாரண நிதியிலிருந்து 3,100 கோடி ருபாய் ஒதுக்கீடு.! விவரம் உள்ளே!
பி.எம் கேர் நிதியிலிருந்து, 3,100 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நிதிக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கலாம் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி, பிரதமர் நிவாரண நிதி திட்டமான பி.எம் கேர் திட்டத்திற்கு பலர் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்தனர்.
தற்போது அந்த பி.எம் கேர் நிதியிலிருந்து, 3,100 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த 3100 கோடியில் இருந்து 2000 கோடி கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் வென்டிலேட்டர்கள் வாங்க செலவு செய்யப்படும் எனவும், 1000 கோடி ருபாய் புலம்பெயர் தொழிலாளர் நலனுக்காகவும், 100 கோடி ரூபாய் கொரோனா மருந்து கணடறியும் ஆய்வுக்கு ஒதுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.