31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பிஎஸ்எல்வி சி40 ராக்கெட்!
31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி40 ராக்கெட்.இஸ்ரோவின் 3 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.கார்ட்டோசாட் 2எஸ் வரிசை செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.1 நானோ செயற்கைக்கோலும் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்தியாவின் மேலும் 2 செயற்கைக்கோள்களும் செலுத்தப்பட்டன.6 வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன.கனடா, பின்லாந்து, பிரான்ஸ் செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டன.தென்கொரியா, பிரிட்டன், அமெரிக்க செயற்கை கோள்களும் செலுத்தப்பட்டன.இரு வேறு சுற்றுப் பாதைகளில் செயற்கைக்கோள்கள் செலுத்தப்படுகின்றன.
ராக்கெட்டின் செயல்பாடு :
கடந்த ஆகஸ்ட் மாதம் பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் சுமந்து சென்ற செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தும் முயற்சி, வெப்பத்தகடு பிரியாததால், தோல்வியில் முடிந்தது. நான்கு மாத இடைவெளிக்குப் பின்னர், இஸ்ரோ தற்போது, பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. .
இதன்மூலம், தனது 100ஆவது செயற்கை கோளை, சுற்றுவட்டப்பாதையில் இஸ்ரோ நிலைநிறுத்தியது இதற்கான 28 மணி நேர கவுன்டவுன் நேற்று அதிகாலை 5.29 மணிக்கு தொடங்கியது. சிறிய ரக செயற்கைக் கோள்களின் சந்தையில் தனக்கான இடத்தை உறுதி செய்வதற்கான முக்கிய முன்னெடுப்பாக பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட்டை செலுத்தியது இஸ்ரோ. பொதுவாக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் பணி 20 முதல் 25 நிமிடங்களில் முடிவடைந்து விடும்.
இன்று விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட்டைச் செலுத்தி, அது எடுத்துச் செல்லும் செயற்கைகோள்களை சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்த ஏதுவாக, சுமார் 2 மணிநேர கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படும். 4 எரிபொருள் நிலைகளைக் கொண்ட இந்த பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட்டை ஏவ, ஏறத்தாழ இரண்டு முறை அதன் இயக்கத்தை நிறுத்திவைத்து மீண்டும் விண்ணில் செலுத்தும் நடைமுறை பின்பற்றப்படட்டது. கார்டோ சாட்-2S தொடரின் அடுத்த (Cartosat-2S series) செயற்கைக் கோள், வெளிநாடுகளின் 28 செயற்கை கோள்கள், ஒரு நானோ செயற்கைகோள், ஒரு சிறிய செயற்கைகோள் உட்பட 31 செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது . ராக்கெட் புறப்பட்ட 8 நிமிடம் 21 வினாடிகளில், நான்காம் நிலையில் உள்ள என்ஜின் இயக்கப்பட்டது.
இதன்பின்னர், 16 நிமிடம் 36 வினாடிகளில், ராக்கெட்டின் நான்காம் நிலை என்ஜின் நிறுத்தப்பட்டு, கார்டோ சாட்-2S விடுவிக்கப்பட்டு, முதல் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். இந்த பணிகள் முடிந்த 42ஆவது நிமிடத்தில், வெளிநாடுகளின் 28 செயற்கோள்கள், ஒரு நானோ செயற்கைகோள் ஆகியவை அதே முதல் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். இதிலிருந்து 15 நிமிடங்களில், நிறுத்தப்பட்ட ராக்கெட்டின் இயக்கம், மீண்டும் தொடங்கும்… ராக்கெட்டின் 4ஆம் நிலையில் உள்ள என்ஜினின் இயக்கம் 2 முறை நிறுத்தப்பட்டு இயக்கப்படும். அடுத்த 45 நிமிடங்களில் 2ஆவது சுற்றுவட்டபாதையில் பயணிக்கத் தொடங்கும்.
ராக்கெட் ஏவப்பட்ட சுமார் 1 மணி 45 நிமிடங்களில் மிகச்சிறிய செயற்கைகோளான, மைக்ரோசாட், 2ஆவது சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். குறைந்த புவி ஈர்ப்புவிசை மற்றும் மிக குளிர்ந்த தட்பவெப்ப சூழலில் ராக்கெட்டை நிறுத்தி இயக்குவது, மீண்டும் இயக்கும் போது உருவாகும் அதிக அளவு வெப்பத்தில் இருந்து ராக்கெட்டை பாதுகாப்பது, ராக்கெட்டை குளிர் நிலைக்கு திரும்ப வைத்தல் ஆகிய சவால்கள் பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் முயற்சியில் அடங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பிஎஸ்எல்வி-சி 40 ராக்கெட் இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
source: dinasuvadu.com