#30KG தங்கம்# முதல்வருக்கு முற்றும் நெருக்கடி?! நெருக்கம் காரணமா??

Published by
kavitha

துாதரகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, கேரளாவுக்கு, 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயனுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

வெளிநாட்டு துாதரகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, கேரளாவுக்கு, 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்  கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலர் சிவசங்கர் அதிரடியாக அப்பதவியிலிருந்து நீக்கல்,உடனே  தங்க கடத்தலில் தொடர்புடைய ஒருவர் சிக்கல்,  மாநில தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்த ஸ்வப்னாவை, சுங்கத் துறையினர் தேடல் என்று  கேரளா அரசியல் பரபரப்பாகி உள்ள நிலையில் இவ்விவகாரத்தால், முதல்வர் பினராயி விஜயனுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சுங்கத்துறை ஸ்வப்னாவை தேட காரணம்? ஏன் முதல்வரின் முதன்மை செயலர் சிவசங்கர்  அதிரடி நீக்கம்?? : ஓர் அலசல்

சுங்கத்துறையால் தேடப்படும் ஸ்வப்னா (34) கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். ஆனால் பிறந்து வளந்தது எல்லாம் ஐக்கிய அரபு எமிரேட்சில், அங்கு அபுதாபி விமான நிலையத்தில் பயணியர் சேவைப் பிரிவில் பணியாற்றினார். பின்னர் 2013-ல் தன்  கணவரிடம் விவாகரத்து பெற்று மீண்டும் தாயகம்  கேரளாவுக்கு திரும்பினார்.

கேரள திரும்பிய அவர்  திருவனந்தபுரத்தில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவன அலுவலகத்தில் பணியாற்றி வந்தார் அப்போது, உடன் பணியாற்றிய அதிகாரி  ஒருவர் மீது, பொய்யான புகார் கொடுத்தாக  சர்ச்சையில் சிக்கினார்.

புகார் மீது விசாரணை நடத்திய போலீசார்  விசாரணையில் ஸ்வப்னா பொய் புகார் கொடுத்ததை ஒப்புக் கொண்டார். பின்னர்  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக அலுவலகத்தில் நிர்வாக செயலராக பணியாற்றினார். அப்போது தான், தங்கம் கடத்துவதற்கான சதித் திட்டத்தை தீட்டி  அதை செயல்படுத்தியது அம்பலமாகி உள்ளது.

பணிபுரிந்த துாதரகத்திலும் சர்ச்சையில் சிக்கினார் இதனை அடுத்து, கேரள மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணிக்கு சேர்ந்தார்.அரசு துறையில் பணிக்கு  சேரவதற்கு முன்னர் ஏற்கனவே நிலுவையில் இருந்த வழக்குகளை மறைத்தது தொடர்பாக, போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர்.

இவ்விவகாரத்தில் விசாரணை நடத்திய போலீசாருக்கு  மேல் மட்டத்திலிருந்து  நெருக்கடி வந்ததாக கூறப்பட்டது. துாதரக அலுவலக பணியிலிருந்து வெளியேறிய போதும், அங்குள்ள அதிகாரிகளுடன், அவர் தொடர்பிலேஇருந்துள்ளார்.

இதில் என்ன உச்சக்கட்டம் என்றால் போலி ஆவணங்களை தயாரித்து, துாதரகத்துக்கு உள்ள சிறப்பு அந்தஸ்தை எல்லாம் தவறாக பயன்படுத்தி தங்கக் கடத்தலுக்கு பெரும் மூளையாக செயல்பட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக துாதரக அதிகாரிகளை சரிக்கட்டுவதற்காக,  திருவனந்தபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் அடிக்கடி, ‘பார்ட்டி’ கொடுத்துள்ளார். மேலும் அதே திருவனந்தபுரத்தில் பிரமாண்ட பங்களா ஒன்றையும் கட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மதிப்பு, சுமார் கோடிக்கணக்கில் இருக்கும் என்று போலீஸ் தரப்பில்  கணிக்கப்படுகிறது

இதில் முதல்வருக்கு எவ்வாறு சிக்கல் என்றால்?

மாநில அரசில் உயர்ந்த பொறுப்பில்  சில அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஸ்வப்னா வீட்டுக்கு அடிக்கடி வந்து அவரை சந்தித்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்  அதிகாரிகளையும்,  ஆட்சியாளர்களையும் கைக்குள் போட்டு, தங்க வேட்டையை தைரியமாக  நடத்திய ஸ்வப்னாவை இப்போது, சுங்கத் துறை அதிகாரிகளும், போலீசாரும் துரத்தத் துவங்கி உள்ளனர்.கேரள முதல்வருக்கு மிக  நெருக்கமாக  மாநில தொழிட்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் விவகாரம் விஷ்வரூபம் எடுக்க  முதல்வருக்கு சிக்கல் சிலந்தி வலை போல் சிக்கியுள்ளதாக கேரள வட்டாரத்தகவல்கள் பிளிறுகின்றன.

Published by
kavitha

Recent Posts

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

5 hours ago

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

9 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

9 hours ago

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

9 hours ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

10 hours ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

11 hours ago