சிபிஎஸ்இ தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி சுமார் 50 நாட்களில் முடிவடையும் என்று மனிதவள மேம்பாட்டு ஆணையம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ விடைத்தாள்களை திருத்தும் பணிக்காக நாடு முழுவதும் 3,000 பள்ளிகள் தேர்வு செய்துள்ளோம் என்று அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார். மேலும், 1.5 கோடி விடைத்தாள்களை இந்த மையங்கள் மூலம் ஆசிரியர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். சிபிஎஸ்இ தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி சுமார் 50 நாட்களில் முடிவடையும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாடு முழுவதும் ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தரப்பில் அறிவிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், சிபிஎஸ்இ தேர்வுக்கான புதிய தேதியை மனிதவள மேம்பாட்டு ஆணையம் அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் அறிவித்திருந்தார். மேலும், தேர்வுக்கான முடிவுகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று தகவலும் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…