வாடகை வாகன ஓட்டிகளுக்கு 3.000 நிவாரண தொகை வழங்கப்படும் எனவும், அதற்காக ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. எனவே, பல மாநிலங்களில் மக்களுக்கு கொரோனா நிவாரண உதவித் தொகைகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது கர்நாடக அரசும் மக்களுக்கான உதவித்தொகை வழங்கி வருவதுடன், வாடகை வாகன ஓட்டிகளுக்கும் உதவித்தொகை வழங்க உள்ளதாகவும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா காரணமாக வணிக நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஆட்டோ, டாக்சி, மேக்சிகேப் ஓட்டுநர்களுக்கு 3000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த உதவித்தொகை பெறுவதற்கு http://sevasindhu.Karnataka.gov.in/இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மே 27-ஆம் தேதி முதல் பலர் இந்த இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை அனுப்பி வருவதாகவும், இந்த இணையதளத்தில் ஜூலை 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், ஜூலை 15 மாலை 6 மணிக்குள் விண்ணப்பங்கள் பதிவிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்டோ, டாக்ஸி மற்றும் மேக்சிகேப் வாகன ஓட்டுனர்களுக்கு கேட்டுக்கொள்வதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…