பெங்களூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,000 பேரை காணவில்லை…! – கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா
பெங்களூரில் குறைந்தது 2,000 முதல் 3,000 பேர் தங்கள் தொலைபேசிகளை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு, வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக போராடி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில், 3.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா அவர்கள், பெங்களூரில் குறைந்தது 2,000 முதல் 3,000 பேர் தங்கள் தொலைபேசிகளை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு, வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர். இவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சர் ஆர்.அசோகா, காணாமல் போனவர்களை கண்காணிக்குமாறு போலிஸாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். கர்நாடகாவை கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து, அங்கு முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.