எல்லையில் 300 பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டம் – இந்திய ராணுவம் தகவல்.!
ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்திற்குள் நுழைய 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்திய எல்லையில் ஊடுருவ தயாராக இருப்பதாக, மூத்த ராணுவ ஜெனரல் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துணை ராணுவப்படையைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் அளித்த பேட்டியில், எல்லையில் பயங்கரவாதிகள் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள நவ்காம் என்ற இடத்தில் நுழைய தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் தான் அந்த இடத்தில் நமது வீரர்கள் இருந்தனர்.
அப்போது, அங்கு அமைக்கப்பட்டு உள்ள இரும்பு வேலி வழியாக நுழைய முயன்ற இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து 1.5 லட்சம் இந்திய மற்றும் பாகிஸ்தான் பணம் உட்பட ஒரு பெரிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து AK மற்றும் பிஸ்டலை பறிமுதல் செய்யப்பட்டன.
இதனால், எல்லையில் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 30 ஆம் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய பயங்கரவாதிகள் தயாராக இருக்கிறார்கள் என ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.