கொரோனாவிற்கு மத்தியில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு புதிய நெருக்கடி உருவாகியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த எட்டு நாட்களில் காகங்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கிறது. இது குறித்து மாநில அரசும் எச்சரிக்கையாக உள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தானின் கால்நடை வளர்ப்பு மந்திரி லால்சந்த் கட்டாரியா கூறுகையில், மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் அபாயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அவசரக் கூட்டம் வரவழைக்கப்பட்டுள்ளது. நாங்கள் அதை முழுமையாக கண்காணித்து வருகிறோம் என்று கூறினார்.
ஹடோடி பிராந்தியத்தில் ஏற்பட்ட மோசமான காய்ச்சல் காரணமாக, 100 க்கும் மேற்பட்ட காகங்கள் உயிர் இழந்துள்ளன. இவற்றில் ஜலவர் மாவட்டத்தில் இதுவரை சுமார் 93 காகங்கள் இறந்துள்ளன. இதுவரை 300 -க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள கால்நடை மருத்துவர்களும் இந்த வைரஸ் பறவை முதல் பறவை வரை பரவும் ஒரு நோய் என்று கூறுகின்றனர். இந்த நோய் மனிதர்களுக்கும் பரவக்கூடும் என கூறப்படுகிறது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…