ஐடி ரெய்டில் சிக்கிய 300கோடி… எம்.பி தீரஜ் சாஹுவிடம் விளக்கம் கேட்ட காங்கிரஸ்..!

ராஞ்சியில் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் குமார் சாகு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் ரூ.300 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.  வருமான வரித்துறை (ஐடி) துறையினர் நடத்திய சோதனையின் போது ரூ.300 கோடி மீட்கப்பட்டதையடுத்து, ராஜ்யசபா உறுப்பினர் தீரஜ் சாஹுவிடம் காங்கிரஸ் விளக்கம் கேட்டுள்ளது.

காங்கிரஸ் ஜார்க்கண்ட் பொறுப்பாளர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) உறுப்பினர் அவினாஷ் பாண்டே ராஞ்சியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, இது அவருடைய கூட்டுக் குடும்பத்தின் கூட்டுத் தொழில். அந்த குடும்பம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் செய்து வருகிறது. இவ்வளவு பெரிய தொகை எங்கிருந்து கிடைத்தது என்ற தகவலை அவரால் மட்டுமே அளிக்க முடியும். ஆனால் அவர் காங்கிரஸ் உடன் தொடர்புடையவர் என்பதாலும், எங்கள் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் என்பதாலும், அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது  என தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கும் காங்கிரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது தீரஜ் சாஹுவின் தனிப்பட்ட விஷயம் என்று கட்சி ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. அதே சமயம் வருமான வரித்துறையிடம்  இருந்து அதிகாரபூர்வ அறிக்கை வரும் வரை எதிலும் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது’ என்றார்.

சாஹு வருமான வரித்துறையில் சிக்குவது இது முதல் முறையல்ல. மே 2018 இல் மூன்றாவது முறையாக ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர் டிசம்பர் 2019 இல் டெல்லிக்குச் செல்லும் போது ராஞ்சி விமான நிலையத்தில் அவரது பையில் சுமார் ரூ.30 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே மத்திய தொழில் பாதுகாப்பு படை  ஐடி  துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர்  அவரிடம் ஐடி துறையினர் விசாரணை நடத்தினர். பணம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர் அவர் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Priyanka Gandhi - Wayanad
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert