15 வயது சிறுமியை சுத்தியலால் தாக்கி பலாத்காரம் செய்த 30 வயது நபர் கைது...!

A 30-year-old man has been arrested for raping and raping a 15-year-old girl in Maharashtra.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை சுத்தியலால் தாக்கி பலாத்காரம் செய்த 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் உல்லாஸ் நகரில் உள்ள ரயில்வே நிலையத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை 15 வயது சிறுமி ஒருவர், சுத்தியலால் தாக்கி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ரயில் நிலையத்தில் 2 கூட்டாளிகளுடன் வந்த 30 வயது நபர் தன்னை மிரட்டி, அதன் பின்பு சுத்தியலால் தாக்கி பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார். மேலும் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு பின்பு அந்த இடத்திலேயே மயங்கி தூங்கிவிட்டாளாம். அதன் பின்பு இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

குற்றம் செய்தவர்கள் அரசியல் அதிகாரம் உள்ளவர்களாக இருந்ததால் ரயில்வே நிலையம் அருகிலிருந்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது இதுகுறித்து உல்லாஸ் நகர் காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுமியை பலாத்காரம் செய்த 30 வயது நபரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். இவர் செப்டம்பர் 14-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்படுவார் எனவும் காவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.