கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேர்ந்தால் 30 லட்சம் இழப்பீடு.! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Supreme cour of India

எத்தனை புதிய கண்டுபிடிப்புகள் நமது நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறை மட்டும் இன்னும் பல இடங்களில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த சம்பவங்களால் விஷ வாயு தாக்கி பல நேரங்களில் உயிரிழப்புகள், நிரந்தர உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் இந்த நடைமுறைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த பொதுநல வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் நடைபெற்றது.

“நமோ பாரத்”.. அதிவேக ட்ரான்சிட் ரயிலை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

அப்போது நீதிபதிகள் மத்திய , மாநில அரசுகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அவர்கள் கூறுகையில், கழிவுகளை மனிதர்களே அகற்றும் போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இழப்பீடு தொகையாக அவர்களது குடும்பத்தாருக்கு 30 லட்சம் வரையில் கொடுக்க வேண்டும்.

மேலும் கழிவுகளை அகற்றும் போது ஏற்படும் நிரந்தர உடல் பாதிப்புக்கு 20 லட்சம் ரூபாய் வரையில் இழப்பீடு தொகை அளிக்க வேண்டும். வேறு உடல்நல பாதிப்பு ஏற்பட்டால், 10 லட்சம் ரூபாய் வரையில் இழப்பீடு தொகை அளிக்க வேண்டும் இதனை மத்திய மாநில அரசுகள் ஒன்றாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை தடுக்க அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மத்திய மாநில அரசுகள் இழப்பீடு தொகையை சேர்ந்து அளிக்க வேண்டும். இதனை அரசுகள் மனிதாபிமான அடிப்படையில் பார்க்க வேண்டிய விவகாரம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்