#30KGதங்க கடத்தல்- சினிமாவில் முதலீடா??திடுக்கிடும் கேரளா!
கேரளா அரசியலை உலுக்கி எடுத்து வருகின்ற பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தங்க கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள (ஸ்ப்னா) என்ற மும்தாஜ் கடத்தல் பணம் மூலமாக மலையாள சினிமா படங்களுக்கு பைனாஸ் செய்தாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூலை 5-ம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக நடத்திய சோதனையில் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இது அரபு எமிரேட்ஸ் தூதரக அலுவலக முன்னாள் ஊழியர்களான ஷரீத், கேரள தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரியாக பணியாற்றிய மும்தாஜ் என்ற ஸ்வப்னா ஆகியோருக்கு இந்த கடத்தலில் முக்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதில் ஷரித் கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மும்தாஜ் மற்றும் அவருடைய கூட்டாளி சந்தீப் நாயர் ஆகியோர் தலைமறைவாக பெங்களூருவில் பதுங்கியிருந்த இருவரையும் என்.ஐ.ஏ.எனப்படுகின்ற தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் அதிரடியாக கைது செய்து கேரளா கொண்டு வந்ததுடன் சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த பைசல் பரீத் என்பவன் துபாயில் அந்நாட்டு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டான்.
கைது செய்யப்பட்ட அவனை இந்தியா அழைத்து வந்து விசாரணை நடத்திய அதிகாரிகள் மும்தாஜ் என்ற ஸ்வப்னாவுக்கு சினிமா தொடர்பு இருந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
மூளையாக செயல்பட்டு தங்கத்தை கடத்திய பணத்தைக் கொண்டு 4 மலையாள திரைப்படங்களுக்கு தனது பினாமி மூலமாக மும்தாஜ் என்ற ஸ்வப்னா பைனான்ஸ் செய்தது அம்பலமாகியுள்ளது. இதில் மும்தாஜின் தோழி ஒருவர் தான் பினாமியாக இருந்துள்ளார்.அவரிடம் தான் பணம் இருக்கிறது என்று கைதான பைசல் பரீத் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதையடுத்து களமிறங்கிய அதிகாரிகள் மும்தாஜின் தோழியிடம் இருந்து ரூ.15 லட்சத்தை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.இந்நிலையில் ஸ்வப்னா என்ற மும்தாஜ் ஜாமின் வேண்டி எர்ணாகுளம் சிறப்பு என்.ஐ.ஏ கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த ஜாமின் மீதான மனு ஜூலை 24ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
கடத்தல் பணத்தை சினிமாவில் முதலீடு செய்த சம்பவம் மற்றும் மூளையாக செயல்பட்டது தீவிரவாதிகளுடம் சதி செயல் என அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் குவிந்து வருவதால் கேரள அரசியல் களம் சற்று பரபரப்பாக உள்ளது.