ஆந்திராவில் ஆண் நண்பருடன் வெளியில் சென்ற பெண்ணை பலாத்காரம் செய்த 3 இளைஞர்கள்!

Published by
Rebekal

ஆந்திராவிலுள்ள கிழக்கு கோதாவரி பகுதியில் தனது ஆண் நண்பருடன் வெளியில் சென்றிருந்த பெண்ணை மூன்று இளைஞர்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்பில்லை என்ற நிலை தான் உருவாகி உள்ளது. சில ஆண்கள் பெண்களிடம் தவறான எண்ணத்துடன் நடந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் தனியாக வெளியில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது ஒருபுறமிருக்க, தனது ஆண் நண்பர்களுடன் வெளியில் செல்லக் கூடிய பெண்களுக்குமே பாதுகாப்பு கிடையாது. சில இடங்களில் ஆண் நண்பர்களே தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து பெண்களை மானபங்கப்படுத்தி விடுகின்றனர் அல்லது அவ்விடத்திலிருந்து அவர்கள் தப்பித்து சென்று விடுகிறார்கள். அப்படியும் இல்லை என்றால் சில ஆண் நண்பர்கள் நின்று போராடினாலும் எதிரில் இருக்கக்கூடியவர்கள் கூட்டமாக வந்து இருக்கும் பொழுது ஒன்றும் செய்ய முடியாமல் தங்கள் உயிரையும் இழந்துவிடுகிறார்கள்.

இந்நிலையில் தற்போது ஆந்திராவில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த 21 வயது பெண் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கடற்கரைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது அங்கே சென்ற மூன்று இளைஞர்கள் அந்த பெண்ணை மடக்கிப் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பாக அந்தப் பெண்ணை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்து அடிக்கடி அச்சுறுத்தி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து தற்போது இந்த சம்பவம் தொடர்பாக  காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதற்காக சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

மகாராஷ்டிரா : வெடிபொருள் தொழிற்சாலையில் பயங்கர விபத்து! 5 பேர் பலி!

மகாராஷ்டிரா : வெடிபொருள் தொழிற்சாலையில் பயங்கர விபத்து! 5 பேர் பலி!

மும்பை :  மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே பாந்தரா மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வெடி…

1 hour ago

தொலைக்காட்சி நேரலையில் ‘தகாத’ வார்த்தைகள்… சீமான் ஆவேசம்!

சென்னை : இன்று பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிகள் 51 பேர் உட்பட நாம்…

2 hours ago

தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் யார் யார்? விஜய் எடுக்கும் முக்கிய முடிவு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தொடங்கினார். அதன் முதலாம் ஆண்டு நிறைவு…

3 hours ago

3000 பேர்.., நாதக to திமுக : சீமான் மீது அதிருப்தி? முதலமைச்சர் முன்னிலையில் கட்சியில் இணைப்பு!

சென்னை : கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் களம் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை சுற்றி சுழன்று…

4 hours ago

Live : தமிழக அரசியல் நகர்வுகள் முதல்… உலக செய்திகள் வரை…

சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று…

6 hours ago

அமெரிக்காவில் ‘இவர்களுக்கு’ பிறப்பால் குடியுரிமை இல்லை? டிரம்ப்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் அதிரடி தடை!

சியாட் : அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார்.…

7 hours ago