இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வருமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும், இதில் சிறியவர்கள் பெரியவர்கள் என்றும் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதன் விழிப்புணர்வை உணர்ந்த சிறுமிக்கு சளி தொந்தரவு இருந்ததால் ஆரம்ப சுகாதார மையத்திற்கு தனியாக சென்று சோதனை செய்துகொண்டார்.
நாகாலாந்து மாநிலத்தில் உள்ள ஜூன்ஹிப்போட்டோ மாவட்டத்தை சேர்ந்தவர் 3 வயது லிபாவி என்ற சிறுமி. இவருக்கு ஜூன் 2ஆம் தேதி இரவிலிருந்து சளித்தொல்லை இருந்து வருகிறது. இவரது பெற்றோர் நிலத்தில் வேலைக்கு சென்றுவிட்ட பிறகு, சுய விழிப்புணர்வோடு யோசித்த அச்சிறுமி லிபாவி அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார மையத்திற்கு முகக்கவசம் அணிந்து சென்றுள்ளார். மாஸ்க் போட்டுகொண்டு வந்த அந்த சிறுமி லிபாவியிடம் மருத்துவர் என்ன செய்கிறது என்று விசாரித்துள்ளார். அதற்கு தனக்கு சளி பிடித்திருப்பதாக லிபாவி தெரிவித்துள்ளார்.
மேலும் இதை நாகாலாந்து பாஜக இளைஞரணி தலைவர் பெஞ்சமின் எப்தோமி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பெரியவர்களே மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்யவும், தடுப்பூசி போடவும் பயந்து வரும் இக்காலத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொண்ட இச்சிறுமி பலருக்கும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அக்குழந்தைக்கு விரைவில் குணமாக வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவத்தினால் இக்குழந்தையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…