தெலுங்கானாவில் விவசாய நிலத்தில் தோண்டப்பட்ட 120 அடி ஆழ்துளைகிணற்றில் விழுந்த குழந்தை பலி.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டத்தில் உள்ள பாப்பனபெட் என்ற கிராமத்தில் விவசாய பயன்பாட்டிற்காக ஆழ்த்துளை கிணறு அமைக்க 120 அடி ஆழத்திற்கு தோண்டியுள்ளனர் .நேற்று மாலை 5 மணி அளவில் அதன் அருகில் நின்றுகொண்டிருந்த சாய் வர்தன் என்ற மூன்று வயது சிறுவன் தவறி விழுந்துவிட்டான்.
குழந்தை சிக்கியிருக்கும் ஆழ்துளை கிணற்றுக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு,கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது .குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழு,தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் கடுமையாக போராடினர்.எனினும் எடுத்த அத்தனை முயற்சியும் பலனளிக்காமல் சிறுவன் உயிரிழந்துவிட்டான்.
இந்த ஆழ்துளை கிணறானது செய்வாய்க்கிழமை இரவுதான் தோண்டப்பட்டுள்ளது .120 அடி ஆழத்திற்கு தோண்டியும் தண்ணீர் வராததால் அவர்கள் மூடாமல் சென்றுள்ளனர் .இந்நிலையில் குழந்தை பலியானது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…