புதுச்சேரியில் ஒரேநாளில் பரப்புரை மேற்கொள்ளும் 3 மத்திய அமைச்சர்கள்….!

புதுச்சேரியில் ஒரேநாளில் பரப்புரை மேற்கொள்ளும் 3 மத்திய அமைச்சர்கள்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரே நாளில் தனித்தனியாக 3 மத்திய அமைச்சர்கள் பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். அதன்படி, காலை 9:45 மணிக்கு புதுச்சேரி வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனியார் விடுதியில், காலை 10 மணிக்கு, புதுசாரி பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.
இதன்பின் விமானம் மூலம் காரைக்கால் செல்கிறார். அங்கு, 5 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். அதன்பின் மீண்டும் புதுச்சேரி வரும் அவர், கிழக்கு கடற்கரை சாலையில், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.
சென்னையில் இருந்து காரைக்காலுக்கு வரும் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், அர்ஜுன் ராம் மேக்வால் காரைக்காலில் உள்ள 11 மீனவ கிராமங்களில் உள்ள மீனவ மக்களை நேரடியாக சந்திக்கின்றனர். இதனை தொடர்ந்து புதுச்சேரி வரும் இவர்கள், மீனவ மக்களை சந்தித்து பரப்புரையில் ஈடுபட உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
தொகுதி மறுசீரமைப்பு : “நாங்கள் தினமும் இதை செய்கிறோம்., ஏற்க மறுகிறாரக்ள்” கனிமொழி கண்டனம்!
March 18, 2025