ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை அதிரடியான அதிகாலை தாக்குதல்
ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் நடந்து வரவும் துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினரால் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது .
காஷ்மீர் காவல்துறை, 62 ஆர்.ஆர் மற்றும் சிஆர்பிஎஃப் கூட்டுக் குழு இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் அம்ஷிபோரா கிராமத்தில் தேடுதல் வேட்டையை நடத்தினர்.அப்பொழுது அங்குள்ள பழத்தோட்டத்தில் ஒரு வீட்டிற்குள் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதனிடையே ,அந்த வீட்டை சுற்றிவளைத்த போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர் .இதற்கு பதில் தாக்குதல் அளித்ததில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும் குல்காமில் வெள்ளியன்று பாதுகாப்புப் படையினர் மூன்று பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.இதில் ஜெய்ஷ்-இ-முகமது தளபதி ஒரு ஐ.இ.டி நிபுணர் என்று நம்பப்படுகிறது.