நக்சலைட்டுகளுடன் நடந்த மோதலில் 3 வீரர்கள் காயம்..!

Default Image

இன்று அதிகாலை சுக்மா மாவட்டத்தில் உள்ள எல்மகுண்டா முகாம் அருகே நக்சல்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகளுக்கும், சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும் இடையே இன்று காலை மோதல் ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில்ஹேமந்த் சவுத்ரி, காவலர் பசப்பா, லலித் பாக் ஆகிய மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர்.

3 வீரர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், காயமடைந்த வீரர்கள் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருவதாக பஸ்தார் ஐஜி பி சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.

திடீர் தாக்குதல்:

இன்று காலை 6 மணியளவில் சிஆர்பிஎஃப் வீரர்களின் முகாம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதாகவும், நக்சலைட்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்திய உடனே ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர் என பஸ்தார் ஐஜி பி சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi