3 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளன. இதில் 18 தொகுதிகளில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளில் வழக்குகள் காரணமாக தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த மூன்று தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் முறையிட்டது.
அதேபோல் ஒப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் வழக்குகள் முடிவடைந்த நிலையில், சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் சூலூர் தொகுதியும் காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலர் அறிவித்தார். இந்த 3 தொகுதிகளும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
இந்நிலையில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தவேண்டும் என்று திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனால் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த கோரும் வழக்கை இன்று (மார்ச் 28-ஆம் தேதி) விசாரணை நடத்துவதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அதில் தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல் தெரிவித்தது. சரியான காலம் வரும்போதுதான் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த முடியும் என்றும் அவசர கதியில் நடத்த முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்தது.
பின்னர் 3 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.மேலும் வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…