ஒரு நிறுவனம் தயாரிக்கும் ஒரே தடுப்பூசிக்கு 3 விலைகளா? – சோனியா காந்தி சரமாரி கேள்வி!
ஒரு நிறுவனம் தயாரிக்கும் ஒரே தடுப்பூசிக்கு 3 விலைகளா? என கேள்வி எழுப்பி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதத்தில், நாடு முழுதும் கொரோனா வைரஸ் தாண்டவமாடிக கொண்டிருக்கும் நேரத்தில், மக்கள் நலனில் அக்கறையுள்ள எந்த ஒரு தலைவரும் மக்கள் துயரப்படும் நேரத்தில் விலையை உயர்த்தி அவர்களை வதைக்க அனுமதிக்க மாட்டார்கள் என கூறியுள்ளார்.
ஒரு நிறுவனம் தயாரிக்கும் ஒரே தடுப்பூசிக்கு மத்திய அரசுக்கு ரூ.150, மாநில அரசுக்கு ரூ.400, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என மூன்று விலைகளா? என கேள்வி எழுப்பி, மக்கள் துயரத்தை பயன்படுத்தி லாபம் சம்பாதிக்க ஒரு தனியார் நிறுவனத்தை மத்திய அரசு எப்படி அனுமதிக்கலாம் என்றும் கேட்டுள்ளார்.
மேலும், சரியான மருத்துவ வசதிகள் இல்லை, படுக்கைகள் இல்லை, ஆக்சிஜன் இல்லை, மருந்து இல்லை என்று அனைத்தும் தட்டுப்பாடுகள் உள்ள நிலையில், தடுப்பூசி மட்டுமாவது அனைவருக்கும் இலவசமாக வழங்க முயற்சி செய்யாமல் 18 முதல் 45 வயது உள்ள இளைய சமுதாயத்தினருக்கு தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்திருப்பது கவலை அளிக்கிறது.
மேலும், மத்திய அரசு ஒதுக்கீடாக உள்ள 50% மருந்து பொருட்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது குறித்து அறிக்கை அளிக்கவேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
The nation’s goal must be to ensure that everyone over 18 years is given the vaccine, regardless of their economic circumstances. I urge you to intervene immediately & reverse the new Covid19 vaccination policy.
– Congress President Smt. Sonia Gandhi writes to PM Modi pic.twitter.com/lXFmbfULdT
— Congress (@INCIndia) April 22, 2021