3 பேருக்கு கொரோனா வைரஸ் ! மாநில பேரிடராக அறிவித்த முதலமைச்சர் பினராயி விஜயன்
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மாநில பேரிடராக அறிவிப்பு 3 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சீனாவில் பலி எண்ணிக்கை 426 ஆக அதிகரித்துள்ளது இதில் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஆவார்.இந்த பிரச்னை உலக நாடுகளை நடுங்க வைத்திருக்கிறது .இந்நிலையில் சீனாவில் வுகான் மாகாணத்தில் மருத்துவம் படித்து வந்த இரு கேரள மாணவர்களுக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருக்கும் நிலையில் நேற்று சீனாவில் இருந்து திரும்பிய மற்றொரு கேரள நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மாநில பேரிடராக அறிவித்துள்ளார் .இது குறித்து கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலாஜா கூறுகையில் ,வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் சுமார் 2000 மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதகாவும் முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுறுத்தலின் படி மாநில பேரிடராக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் .இவ்வாறு மாநில பேரிடராக அறிவிப்பதன் மூலம் மாநில அரசு வேகமாக இயங்கும் நோய் பரவுவதை தடுக்க வழிவகை செய்யும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார் .
கேரளாவுக்கு சீனா மற்றும் பிறைநாடுகளில் இருந்து திரும்பிய எண்ணிக்கை 2,239 பேர் என்றும் இவர்களில் 2,155 பேர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்னர் என்றும் இவர்களில் 84 பேர் மாநிலத்தின் பல்வேறு மருத்துமனைகளில் தங்கவைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர் .பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட 140 மாதிரிகளில் 46 மாதிரிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் 3 பேருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .