ஒரு மாதத்திற்கு பின் புதுச்சேரியில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!
புதுச்சேரியில் கடந்த ஒரு மாதத்திற்கு தொற்று பதிவாகாத நிலையில், மூன்று மாதங்களுக்குப் பின் கடந்த 24 மணி நேரத்தில் மூன்றுபேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
இதனை அடுத்து அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியில் கடந்த ஒரு மாதத்திற்கு பின் தொற்று பதிவாகாத நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மூன்றுபேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.