சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் நடந்த மோதலில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கரில் 3 நக்சல் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்

சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள கர்ரேகுட்டா வனப்பகுதியில், தெலுங்கானா எல்லைக்கு அருகே பாதுகாப்புப் படையினருடன் நடந்த ஒரு பெரிய மோதலில் மூன்று நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர் .கடந்த மூன்று நாட்களில் இந்தப் பகுதியில் தொடங்கப்பட்ட மிகப்பெரிய ஒருங்கிணைந்த நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்த சம்பவம் ஒன்றாகும் என்று காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்னர்.
அப்பகுதியில் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகள் இன்னும் நடந்து வருகின்றன. இதுவரை, என்கவுன்டர் நடந்த இடத்திலிருந்து மூன்று நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன,இறந்த நக்சல்களின் அடையாளங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.