இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்தது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினர். அப்போது, இந்தியாவில் மேலும் இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். 7 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் மூன்று தடுப்பூசிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இதுவரை இந்தியாவில் 23 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மூக்கின் வழியாக சொட்டு மருந்து போல செலுத்தக்கூடிய தடுப்பூசி மருந்து பரிசோதனையில் உள்ளது. வரும் நாட்களில் தடுப்பூசிகளை வினியோகம் செய்வது அதிகரிக்கப்படும். இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் 25 சதவீதம் தனியார் மருத்துவமனைகளை வாங்கி பயன்படுத்தலாம். மீதமுள்ள 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு விலைக்கு வாங்கி மாநிலங்களுக்கு வினியோகம் செய்யும்.
இந்தியா ஒரே ஆண்டில் இரண்டு தடுப்பூசிகளை அறிமுகம் செய்திருக்கிறது. எப்போதும் கிடைக்கும் வகையில் தடுப்புசி உற்பத்தி நிரந்தரமாக இருக்கும். குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சோதனையை தொடங்கியுள்ளோம் என தெரிவித்தார். மேலும், நாட்டில் உற்பத்தியாகும் தடுப்பூசிகள் குறித்து வதந்தி பரப்பவேண்டாம் என மோடி அறிவுறுத்தியுள்ளார்.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…