3 மாத சம்பள பாக்கியை தர வலியுறுத்து அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் கூட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து போராட்டம்.
டெல்லி வடக்கு மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த சம்பள நிலுவையை உடனடியாக வழங்கக்கோரி மூத்த டாக்டர்கள் நேற்று முன்தினம் கூண்டோடு சாதாரண விடுப்பில் சென்றனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி மருத்துவமனைககளில் பணிபுரியும் 700-க்கும் மேற்பட்ட மூத்த டாக்டர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் கூட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தனர். இதனால் நோயாளிகள் அனைவரும் பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து நகராட்சி கழக மருத்துவர்கள் சங்கத்தின் (எம்.சி.டி.ஏ) பொதுச் செயலாளர் மாருதி சின்ஹா கூறுகையில், “கடந்த மூன்று மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தை விடுவிப்பது உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை, எனவே நாங்கள் இப்போது காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறினார்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…