மகாராஷ்டிரா மாநிலத்தில் மூடநம்பிக்கை காரணமாக, மூன்று மாத குழந்தைக்கு வயிற்றில் வீக்கத்திற்கு சிகிச்சையளிக்க சூடான அரிவாள் மூலம் வயிற்றில் சூடு வைக்கப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி மாவட்டத்தில் மெல்காட் பழங்குடி பெல்ட்டைச் சேர்ந்த சிக்கல்தாரா தெஹ்ஸில் உள்ள போர்தா கிராமத்தைச் சேர்ந்த குழந்தைக்கு கடந்த சில தினங்களாக வயிற்றில் வீக்கம் வந்துள்ளது. இந்நிலையில், அந்த வீக்கம், இரண்டு நாட்களாக மிக தீவிரம் அடைந்தது.
இதன்காரணமாக, அவனின் பெற்றோர்கள், குழந்தையை ஜூன் 20 தேதி மருத்துவமனைக்கு பதில், ஒரு மாந்திரீகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள மந்திரவாதி ஒருவர், குழந்தையின் வயிற்றில் சூடான அரிவாள் மூலம் தீக்காயங்கள் வைத்தால் அவனுக்கு வீக்கம் குணமடையும் என கூறினார்.
அவரின் பேச்சை கேட்ட பெற்றோர், அதன்படி குழந்தைக்கு குழந்தையின் வயிற்றில் சூடான அரிவாள் மூலம் சூடு வைத்தனர். மேலும் குழந்தையை சிகிச்சைக்காக, சுர்னி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பெற்றோர்களின் இந்த செயல், கட்கும்ப் மாவட்டத்தில் உள்ள சுகாதாரத் துறையின் பறக்கும் படையினருக்கு தெரிய வந்தது.
இதன்காரணமாக அங்கு விரைந்த அதிகாரிகள், அங்கிருந்த தாய் மற்றும் குழந்தையை மீட்டு, அம்மாவட்ட பொது மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். இந்நிலையில், மூடநம்பிக்கையால் குழந்தையின் வயிற்றில் சூடு வைத்ததாக, மகாராஷ்டிராவின் பிளாக் மேஜிக் சட்டத்தின் கீழ், குழந்தையை சூடு வைத்த தாய் மற்றும் தந்தையை சிக்கல்தாரா போலீசார் கைது செய்தனர்.
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…