மத்திய பிரதேசத்தில் ஒரு வாரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், சோகத்தில் இருந்த பெண் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தேவாஸ் எனும் நகரில் கடந்த வாரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கூறுகையில், பால்கிக்ஷன் என்பவரின் குடும்பத்தில் அவரது மனைவி சந்திரகலா, மூத்த மகன் சஞ்சய் மற்றும் இளைய மகன் ஸ்வபினீஷ் ஆகிய 3 பேரும் அடுத்தடுத்த கொரோனாவால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
அடுத்தடுத்த உயிரிழப்புகளை நேரில் கண்டு கடும் துக்கத்தில் இருந்த இளைய மருமகள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…