இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து மீண்ட 3 லட்சம் பேர்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தொடந்து தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இருப்பினும் அதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், மருத்துவர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 315 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 லட்சத்து 2 ஆயிரத்து 644 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை இந்தியாவில் 2 கோடியே 67 லட்சத்து 52 ஆயிரத்து 447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 லட்சத்து 3 ஆயிரத்து 720 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 4 ஆயிரத்து 154 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 கோடியே 37 லட்சத்து 28 ஆயிரத்து 16 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில், தற்பொழுது குணமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தவிர்த்து 27,20,716 தற்பொழுது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.