#BigBreaking:அதிர்ச்சியின் உச்சம் 4 வது நாளாக 3.5 லட்சம் பேர் பாதிப்பு;2,761 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 349,313 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 349,313 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,602,456 உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரனோ வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 26,81,378 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 14,078,081 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மொத்தம் ;2,761 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 192,310 ஆக உயர்ந்துள்ளது
டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு 24,103 க்கும் மேற்பட்டவர்கள் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர் 357 பேர் உயிரிழந்துள்ளனர்.இதற்கிடையில், மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 67,160 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் 676 பேர் உயிரிழந்துள்ளனர் என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்கம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் முறையே 14,281 மற்றும் 38,055 பேருக்கு புதியதாக தொற்று பதிவாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!
April 28, 2025