கோவிலுக்குச் செல்லும் வழியில் மினி லாரி மீது கார் மோதியதில் 3 பேர் பலி !

Accident

குஜராத்தின் பதான் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் மினி டிரக் மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்.

சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள சோட்டிலா நகரத்திற்கு ஒரு கோவில் பிரார்த்தனைக்கு சென்று கொண்டிருந்த போது, சாமி-சங்கேஷ்வர் மாநில நெடுஞ்சாலையில் அவர்களது கார் சென்றுகொண்டிருக்கையில், பின்னால் வந்த மினிலாரி மீது கார் மோதி அதிகாலை 3 மணியளவில் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் ஹஸ்முக் தக்கர் (36), பிந்து ராவல் (27) மற்றும் தஷ்ரத் ராவல் (26) என அடையாளம் காணப்பட்டனர். இவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்