உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 1 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரிலிருந்து நேற்று இரவு 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று ஆக்ரா நோக்கி சென்றுள்ளது. அப்போது தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்துள்ளது. அந்த பேருந்து எதிர்பாராத விதமாக லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த பேருந்து விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஓம்வீர் சிங் தெரிவித்துள்ளதாவது, சாலை ஓரத்தில் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் உறங்கிக்கொண்டிருந்துள்ளார். அச்சமயத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியுள்ளது. இதில் 1 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 2 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் அருகில் உள்ள ஷாபாய் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 26 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இவர்கள் மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
சென்னை : மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில்…
க்கெபெர்ஹா : இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரை விளையாடி வருகிறது. இதில்…
சென்னை : தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான டெல்லி கணேஷ் வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு காலமானார். அன்னாரது…
சென்னை : உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த முத்த நடிகர் டெல்லி கணேஷின் (80) மறைவு பெரும்…
சென்னை : அரசு முறைப் பயணமாக 2 நாள் சுற்றுப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகரில் கள ஆய்வை நேற்று…